சங்கர் மகள்களுக்கு வந்த சோதனை! முதல் படத்துலயே இத்தனை காப்பியா?

Karthi Shankar Shanmugam
By Edward May 09, 2022 08:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு கிரிக்கெட் பயிற்சியாளரான ரோஹித் என்பருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்து வைத்தார்.

ரோஹித் கிரிக்கெட் பயிற்சியாளராக பணியாற்றி வந்த அக்காடமியில் இருந்து ஒரு பெண் பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஹித் மீது புகாரளித்தார். இதனால் ரோஹித் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. அப்பெண் வழக்கில் இருந்து பின் வாங்காமல் வழக்கினை தொடர்ந்துள்ளார். இதனால் ரோஹித் கைது செய்யப்படுவார் என்ற செய்திகளும் வெளியானது.

இதனால், முதல் பெண் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற சோகத்தில் இருக்கும் சங்கர், இரண்டாம் மகளின் சினிமா வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும் என்று யோசித்து விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகபடுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார் சங்கர் மகள் அதிதி சங்கர். அப்படத்தின் முதல் பாடல் பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கராஜா இசையில் சித்ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக அதிதி இப்படத்தில் நடித்துள்ளார். பருத்திவீரன் பிரியாமணி போலவே தோற்றமளித்துள்ளார் அதிதி சங்கர்.

இந்நிலையில் இப்பாடலை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதற்கு காரணம் பாடல் பருத்திவீரன் சாயலிலும், கொம்பன் படத்தின் சாயலும் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

மேலும், பாடலின் இசை நடிகர் ஜெயம் ரவியின் தாஸ் படத்தில் இடம்பெற்ற சக்கப்போடு போட்டாலே என்ற பாடலின் காப்பியா இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதனால் சங்கர் மகளின் முதல் படத்துலையே இப்படி காப்பி வெச்சு கேரியரை க்ளோஸ் பண்ணீட்டீங்களே என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.