நான் அப்படி இருந்ததால் ஒதுக்கினார்கள்!! வாய்ப்பு பறிபோனதை பற்றி கூறிய நடிகை அபிராமி..
தமிழ், தெலுங்கு மொழிகளில் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அபிராமி. அர்ஜுன், பிரபு, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கமல் ஹாசனின் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார்.
அதன்பின் சில காரணங்களாலும் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி குழந்தை குட்டி என்று பார்த்துக்கொண்டார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அபிராமி சமீபத்தில் பேட்டியொன்றில் பல விசயங்களை ஓப்பனாக கூறி வருகிறார்.
அதில், என்னுடைய முதல் முத்தம் 15, 16 வயதில் நடந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், என்னுடன் நடித்த நடிகர்கள் என்னைவிட உயரமானவர்கள். உயம் இல்லாதவர்கள், உயரம் அதிகமானவர்களுடன் நடித்தேன்.
ஆனால் உயரம் எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால் சிலர் அந்த பொண்ணு ரொம்ப உயரமாக இருக்கிறார் என்று கூறி வாய்ப்பினை கொடுக்காமல் ஒதுக்கி இருக்கிறார்கள் என்றும் அதை தான் பிரச்சனையாக நினைக்கவில்லை, இதனால் எனக்கு பட வாய்ப்புகள் போனதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை அபிராமி.