அவங்கள எல்லாம் செருப்பால அடிக்கனும், கோபத்தில் கொந்தளித்த நடிகர்
Vishal
By Yathrika
விஷால்
சினிமா துறையில் அப்பப்போ ஒரு பிரச்சனை பூகம்பம் போல கிளம்புகிறது. அதிலும் MeToo என்ற பிரச்சனை தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது
சின்மயி, ஸ்ரீரெட்டி போன்ற பிரபலங்கள் இந்த பிரச்சனை குறித்து பெரிய போராட்டமே நடத்தினார்கள், ஆனால் அவர்கள் பேசும்போது அனைவரும் பேசுகிறார்கள். பின் காலப்போக்கில் பெண்கள் கூறும் பிரச்சனைக்கு முடிவே இல்லாமல் முடிந்துவிடுகிறது.
கடந்த சில நாட்களாக மலையாள சினிமா நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனை குறித்து புகார் அளித்து வருகிறார்கள். இப்போது இதுகுறித்து பலரும் பேச நடிகர் விஷாலிடம், நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லை குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என கோபத்தில் பொங்கியுள்ளார்.
