முன்னணி நடிகரை தூக்கி எறிந்துவிட்டு, நடிகை லட்சுமி மேனனுடன் நடித்த விஷால்.. எல்லாம் அதுக்குதான்..

love suseenthiran vishal sivakarthikeyan lakshmi menon
By Kathick Mar 18, 2022 10:30 AM GMT
Report

தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து பல படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். 44 வயதாகும் நடிகர் விஷால் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

ஆனால், வரலக்ஷ்மி,லட்சுமி மேனன் என சில நடிகைகளுடன், விஷால் காதல் உறவில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், நடிகர் விஷால் நடிகை லட்சுமி மேனனை காதலித்து வந்தபோது, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்து வந்தார்கள். அப்போது, சசிதரன் இயக்கத்தில் வெளிவந்த பாண்டியநாடு படத்தில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக முதன் முதலில் நடிப்பதாக இருந்தது விஷால் கிடையாதாம்.

ஆம், பாண்டியநாடு படத்தில் முதன் முதலில் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது, முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தானாம். ஆனால், தீடீரென என்ன நடந்ததோ, எது நடந்ததோ, சிவகார்த்திகேயனுக்கு பதில், விஷாலை கமிட் செய்து, லட்சுமி மேனனுக்கு ஜோடியாக நடிக்கவைத்துள்ளார்கள். இதுக்கெல்லாம் காரணம் ஒரு வேல அதுவா இருக்குமோ..?