விஷாலை திருமணம் செய்யப்போகும் நடிகை தன்ஷிகா!!! இத்தனை வயசு வித்தியாசமா?
விஷால்
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. அதன் பின் இவர் நடிப்பில் ரத்னம் திரைப்படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் இப்படம் தோல்வி அடைந்தது.
கடைசியாக விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
சமீபத்தில், தனது திருமணம் குறித்து விஷால் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
அதில், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பின் நான் திருமணம் செய்ய உள்ளேன் என்றும் யாருடன் என என் பிறந்தநாளில் அறிவிப்பதாக கூறியிருந்தார்.
தன்ஷிகாவுடன் திருமணம்
இந்நிலையில் நேற்று மே 19 ஆம் தேதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால், தான் தன்ஷிகாவை காதலிப்பதாவும் ஆகஸ்ட் 29ல் திருமணம் என்றும் கூறியிருக்கிறார்.
அதேபோல் அந்த மேடையில் இருந்த தன்ஷிகாவும் விஷாலை திருமணம் செய்யப்போகிறேன் என்று அதிகாரப்பூர்வமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் 47 வயதாகும் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும்(35) கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் இருக்கிறதாம்.

