விஷாலுக்கு இப்படியொரு நிலைமையா? வசூலில் சரிவை சந்திக்கும் ரத்னம்

Vishal Actors Hari (director) Tamil Actors
By Dhiviyarajan Apr 29, 2024 11:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

2004 -ம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் விஷால். அதன் பின் இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தார்.

இப்படி சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்த விஷால், இப்போது ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது எஸ் ஜே சூர்யா தான். படத்தை முழுவதும் அவர் தாங்கி நடித்து கொடுத்தார். ஆனால் விஷாலின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படவில்லை.

விஷாலுக்கு இப்படியொரு நிலைமையா? வசூலில் சரிவை சந்திக்கும் ரத்னம் | Vishal Rathnam Movie Box Office Report

சமீபத்தில் விஷால் ஹரி கூட்டணியில் ரத்னம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் வெறும் ரூபாய் 7 கோடி தான் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.