பிரியா பவானி சங்கர்-ஆ வேண்டவே வேண்டாம்!! ராசியில்லா நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் நடிகர் விஷால்..

Vishal Priya Bhavani Shankar Gossip Today Hari (director) Tamil Actress
By Edward Apr 25, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் மேயாத மான், கடைக்குட்டி போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்தையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர்களின் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர். அப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர்-ஆ வேண்டவே வேண்டாம்!! ராசியில்லா நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் நடிகர் விஷால்.. | Vishal Rejection Rathnam Promotion Priya Bhavani

சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் ரத்னம் படத்தின் பிரமோஷனுக்காக ஹரி மற்றும் விஷால் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதது பெரியளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர்கள், சக்திவேல் யூடியூப் சேனல் ஒன்றில், பிரியா பவானி சங்கர் ஏன் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் பிரஸ் மீட் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதாவது, நடிகை பிரியா பவானி சங்கர் வேறொரு படத்தில் நடிக்கிறார் என்று ஒரு பொய்யை விஷால் கூறியிருக்கிறார். ஆனால், விஷால் தான் பிரியா பவானி சங்கரை வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாராம்.

பிரியா பவானி சங்கர்-ஆ வேண்டவே வேண்டாம்!! ராசியில்லா நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் நடிகர் விஷால்.. | Vishal Rejection Rathnam Promotion Priya Bhavani

சமீபத்தில் அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை, அதனால் அவர்கள் வரவேண்டாம் நானே பிரமோஷன் செய்து கொள்கிறேன் என்று ஹரியிடம் விஷால் கூறியிருக்கிறாராம். ஆனால் இயக்குனர் ஹரிக்கு பிரியா பவானி சங்கர் பிரமோஷன் செய்ய விரும்பம் இருந்திருக்கிறது. இது கமிட்டாகும் போதே விஷாலுக்கு தெரியாதா? என்றும் விஷால் நடித்த படங்கள் கூட தான் ஓடாமல் இருக்கிறது என்றும் பிஸ்மி மற்றும் சக்தி கூறியிருக்கிறார்கள்.

Cook With Comali 5 -ல் வரும் போட்டியாளர்கள் லிஸ்ட்!! அந்த நடிகையை தட்டித் தூக்கிய விஜய் டிவி..

Cook With Comali 5 -ல் வரும் போட்டியாளர்கள் லிஸ்ட்!! அந்த நடிகையை தட்டித் தூக்கிய விஜய் டிவி..

பிரமோஷன் ஒரு பக்கம் இருந்தாலும் போஸ்டரில் கூட பிரியா பவானி சங்கர் முகத்தை காணோமே என்றும் ஒரு போஸ்டரில் பிரியா பவானி சங்கர் போட்டோ இருப்பதை பார்த்து விஷால் அதை எடுத்துவிடுங்கள் என்றும் கூறியிருக்கிறாராம் என பத்திரிக்கையாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.