அஜித்துக்கே அந்த நிலைமை.. திரிஷாவுக்கு மட்டும் நடக்குமா!! தயாரிப்பு நிறுவனம் மீது கொந்தளிக்கும் ரசிகர்கள்

Ajith Kumar Trisha Lyca Gossip Today VidaaMuyarchi
By Edward May 04, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளில் சிக்கி தன் மார்க்கெட்டை இழந்து தற்போது தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ ஆரம்பித்திருக்கிறார். 96 படம் மிகப்பெரிய வர்வேற்பை கொடுத்ததை அடுத்து, பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை கதாபாத்திரம் திரிஷாவை மிகப்பெரிய இடத்தினையும் மார்க்கெட்டையும் கொடுத்தது.

அஜித்துக்கே அந்த நிலைமை.. திரிஷாவுக்கு மட்டும் நடக்குமா!! தயாரிப்பு நிறுவனம் மீது கொந்தளிக்கும் ரசிகர்கள் | Ajith Fans Slams Lyca Share Just Wish To Trisha

அதன்பின் விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்தப்பின், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வரம்பரா, கமலின் தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சையான சம்பவங்களை சந்தித்த திரிஷா அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சாய் பாபா கோவிலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இன்று மே 4 ஆம் தேதி அன்று திரிஷா தன்னுடைய 41வது வயதினை எட்டியிருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து கூறிய நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள திரிஷாவுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்காவும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்தது.

அஜித்துக்கே அந்த நிலைமை.. திரிஷாவுக்கு மட்டும் நடக்குமா!! தயாரிப்பு நிறுவனம் மீது கொந்தளிக்கும் ரசிகர்கள் | Ajith Fans Slams Lyca Share Just Wish To Trisha

ஏற்கனவே மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளுக்கு வெறும் பிறந்தநாள் வாழ்த்து மட்டும் கூறியதால், விடாமுயற்சி அப்டேட்டுடன் லைக்கா நிறுவனம் வாழ்த்து தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதேபோல் தான் நடிகை திரிஷா பிறந்தநாளுக்கும் லைக்க நிறுவனம் வெறும் வாழ்த்து மடல் மட்டும் போட்டிருக்கிறது. இதனை பலரும் அஜித்துக்கே ஏதும் பண்ணவில்லை, இதில் திரிஷாவுக்கு பண்ணுவாங்கலா என்று விஜய் ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.