ஆட்டோஇம்யூன் நோயால் பாதிகப்பட்டு மீண்டு வரும் நடிகர் விஷ்ணு விஷால்..
Vishnu Vishal
Tamil Actors
By Jai
விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் விஷ்ணு விஷால், தற்போது கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த, 3, 4 வருடங்களாக ஆட்டோஇம்யூன் நோயால் பாதிகப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். அதற்கான மருந்துகள் உட்கொண்டதால் உடலில் சோர்வு ஏற்பட்டது.

தற்போது அதற்காக முழு சிகிச்சையை மேற்கொண்டு குணமாகி வருகிறேன். அதனால் தான் நான் பார்க்க எப்போதும் சோர்வாக இருக்கிறே. என் உடல்நிலை சரியடையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
உங்கள் அக்கறை தான் என்னை இன்னும் ஊக்குவிக்கிறது என்று உருக்கமான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் அவர் மீண்டு வர வேண்டியும் ஆறுதலளித்தும் வருகிறார்கள்.