இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்..

Vishnu Vishal Aishwarya Rajinikanth
By Edward Mar 30, 2023 10:01 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வர்வேற்பு பெற்று வருகிறது. தற்போது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்.. | Vishnu Vishal Stop Divorce Rumours

சில காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விரைவில் ஆரம்பிப்பதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு, கடந்த ஆண்டு விளையாட்டு வீராங்கனை குட்டா ஜுவாலா என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி நன்றாக வாழ்ந்து வரும் நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் ஒரு பதிவினை போட்டு குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தார். இதனை பார்த்த பலர் இரண்டாம் விவாகரத்துக்கு ரெடியா என்று கூறி வந்தனர்.

இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறேனா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்.. | Vishnu Vishal Stop Divorce Rumours

ஆனால், நான் கூறியது வேறொரு விசயத்திற்காக பகிர்ந்ததை தவறாக புரிந்து கொண்டனர் என்று விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பின் தன் மனைவியுடன் சேர்ந்து நெருக்கமாக எடுத்த மிரர் செல்ஃபி வீடியோவை பகிர்ந்தும், தற்போது லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஓய்வில் குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.