விவாகரத்திற்கு காரணமே ரஜினி தான்.. முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால்
வித்தியாசமான கதைகளத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2010 -ம் ஆண்டு ரஜினி நட்ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன் ஆர்யன் என்று மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணு விஷால், ரஜினியை விவாகரத்து செய்துகொண்டனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், முதல் மனைவி ரஜினி குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ரஜினியை பிரிந்த பிறகு வாழ்க்கை இனி தனியாக தான் இருக்க போகிறது என்று நினைத்தேன். காலம் செல்ல செல்ல ஜுவாலாவின் நல்ல குணம் என்னை ஈர்த்தது. அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவியை பிரிய வேண்டும் என்று நான் முடிவு எடுக்கவில்லை.
நீதிபதி கேட்ட சமயத்தில் கூட நான் அமைதியாக இருந்தேன். ரஜினி தான் பிரிய வேண்டும் என்று சொன்னார்.ரஜினியுடன் இப்போது வரை பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவர் மகிழ்ச்சியாக தான இருக்கிறார் என்று விஷ்ணு விஷால்.