காதலிக்கும் போதே வேறொரு நடிகருடன் தொடர்பு!! நடிகை சக்யுக்தாவின் ஆடியோவை வெளியிட்ட விஷ்ணுகாந்த்
சின்னத்திரையில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் பிரச்சனை சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணுகாந்த் காதல் விவகாரம் தான். சில மாதங்களுக்கு முன் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில வாரங்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் மாறிமாறி மற்றொருவர் மீது குற்றம் சுமத்தி வீடியோவை வெளியிட்டு வந்தனர். சில தினங்களுக்கு முன் சம்யுக்தா அடுக்கடுக்கான கேள்விகளை எழுதி அதற்கு வீடியோ மூலம் பதில் அளித்தும் வந்தார்.
தற்போது விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருக்கிறார்.
அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று கூறி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார் விஷ்ணுகாந்த். அந்த ஆடியோவில் அண்ணனாக பேசியவருடன் தன்னிடம் காதலித்த போது தவறாக நடந்து கொண்ட ரவியிடம் பேசாமால் இருக்க முடியவில்லை என்று பல விதமான காரணங்களை கூறியிருக்கிறார் சம்யுக்தா.
இப்படி பல நிமிடங்கள் சம்யுக்தா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார்.
அந்த பதிவில் வைரலாகும் ஆடியோ பற்றி பலர் கேள்விகளை கேட்டும் திட்டியும் கருத்துக்களை கூறி வந்துள்ளனர். தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறியும் திட்டித்தீர்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தும் பதிலளித்துள்ளதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார் சம்யுக்தா.
