திருமணத்திற்கு முன் அர்ஜுன் மகளுக்கு கண்டீசன் போட்ட மாமனார்!! வெளியான ரகசியம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி நடித்து வருபவர் நடிகர் அர்ஜுன். தன் மகள் ஐஸ்வர்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்திருந்தும் சரியான வெற்றியை காண முடியவில்லை.
சமீபத்தில் ஐஸ்வர்யா, காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனும் சர்வைவர் நிகழ்ச்சி போட்டியாளருமான உமாபதி ராமையாவுடன் காதலில் இருந்து வந்துள்ளார். இருவரும் காதலை வெளிப்படுத்தி இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர்.
சில தினங்களுக்கு முன் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், தன் வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா எங்களுக்கு மரு - மகள் தான் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன், தம்பி ராமையா பற்றிய ரகசியத்தை மறைமுகமாக கூறியிருக்கிறார்.
தன் மகன் காதலை ஏற்றுக்கொண்டதோடு மருமகள் ஐஸ்வர்யாவுக்கு ஒரு கண்டீசனை போட்டிருக்கிறார்.
ஆனால் கல்யாணத்திற்கு பின் ஐஸ்வர்யாவை நடிக்க கூடாது என்று கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் உமாபதிக்கு 28 வயதும் ஐஸ்வர்யாவுக்கு 31 வயது ஆகிறது என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் வித்தகன்.