மறைந்த நடிகர் விவேக்கை வளரவிடாமல் தடுத்த கமல் ஹாசன்..

Kamal Haasan Viral Video Vivek
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் விவேக். கடந்த ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்தியன் 2-வில் விவேக்

இந்த சம்பவம் இந்திய திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்தது. இந்நிலையில் கமல் ஹாசனின் இந்தியன் 2, அண்ணாச்சியின் தி லெஜண்ட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் விவேக்கின் மறைவிற்கு பிறகு அவரது காட்சிகள் நீக்கப்பட்டு ரீகிரியேட் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கமல் ஹாசனுடன் இணைந்து படங்களில் நடிக்கவே இல்லை. அது இந்தியன் 2 படத்தில் தான் நிறைவேற இருந்தது. ஆனால் விவேக் காலாமாகிவிட்டது ஏமாற்றத்தை கொடுத்தது.

ஒதுக்கி வந்த விவேக்

இப்படியிருக்கையில் விவேக் ஒரு காரணத்திற்காக தான் கமல் ஹாசனுடன் நடிப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். இது ஒரு மேடையில் நடிகர் விவேக் அவர்கள் கூறியிருக்கிறார். 2015ல் விவேக் கதாநாயகனாக நடித்து வெளியான படம் பாலக்காட்டு மாதவன்.

அப்படம் பல தியேட்டர்களில் பல நாடுகளில் வெளியாகவிருந்தது. ஆனால் அப்போது பாகுபலியுடன் மோதவிருந்த கமல் ஹாசனின் பாபநாசம் படம் என் படத்துடன் மோதியது. பிளான் போட்டு செய்த கமல் ஹாசனால் பாலக்காட்டு மாதவன் படத்திற்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்று விவேக் கூறியுள்ளார்.

பாகுபலி போன்ற பெரிய படத்திடம் மோதமுடியாமல் விவேக்கின் வளர்ச்சிக்கு இடையூராக இருந்திருக்கிறார் கமல் ஹாசன். அவர்களிடன் விவேக் பலமுறை கெஞ்சியும் அதை செய்தார்களாம்.