30 வருடங்களாக விவேக்கை ஒதுக்கி வைத்த நடிகர் கமல்! இதுதான் காரணமா?

vivek comedian indian2 kamalhaasan tamilactors
By Edward Mar 08, 2022 06:25 AM GMT
Edward

Edward

Report

60 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவில் பயணித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சாதனைகளையும் விருதுகளையும் பெற்று உலக நாயகன் என்ற பெருமை சேர்த்தவர் நடிகர் கமல் ஹாசன். படத்தில் நடிக்க பல நட்சத்திரங்கள் காத்திருக்கும் நிலையில் ஒரு கதாபாத்திரமாவது கிடைக்காத என்று ஏங்குபவர்கள் தான் அதிகம்.

அந்தவகையில், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியர் நடிகர் விவேக். ஆனால், கமலஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. சில படங்கள் வாய்ப்பு வந்தும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிட்டதாகவும் தெரிகிறது.

ஒருவேளை விவேக் கருத்து காமெடியனாக இருந்ததால் கமல்ஹாசன் ஒதுக்கி விட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கமலஹாசன் நினைத்திருந்தால் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தது போல விவேக்கிற்கு கொடுத்திருக்கலாம்.

கடைசியாக இந்தியன் 2 படத்தில் விவேக் ஒப்பந்தமாகி நடித்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்தியன் 2 படம் வருமா? வராதா? என்ற இழுபறியில் தவித்துக் கொண்டிருக்கும் போது விவேக் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏதோ ஒரு காரணத்தினால் விவேக்கிற்கு கடைசிவரை கமல் படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. இத்தனைக்கும் கமலின் ஆஸ்தான குருவான கே பாலச்சந்தரின் விருப்பமான பிரபலங்களில் விவேக் முக்கியமான விவேக் இந்த ஆசை நிறைவேறாமல் சில ஆண்டுகளுக்கு முன் மரணித்துள்ளார்.