வாய்ப்புக்காக பிரைவேட்-ஆ பார்க்க கூப்பிட்டா!! விஜே ஜாக்குலின் கொடுத்த பதில்..
விஜே ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே ஜாக்குலின்.
இந்நிகழ்ச்சியை விஜே ரக்ஷனுடன் பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய ஜாக்குலின், கோலமாவு கோகிலா படத்தில் நயன் தாராவுக்கு தங்கையாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது கெவி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஜாக்குலின்.
மோசமான சம்பவம்
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் ஒரு பாதுகாப்பற்ற நிலை, மோசமான சம்பவம் நடந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், என்னை அப்படி கேட்டிருக்கிறார்கள்.
ஒரு பட வாய்ப்பு இருக்கு, ஆனால் நீங்கள் பிரைவேட்-ஆ பார்க்கணும்னு சொல்லுவாங்க. அதற்கு நான், இதை என்னிடம் கேட்பதற்கு உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது என்று தெரியவில்லை. இப்படியான ஐடியா வந்தால் என்னை கூப்பிடாதீங்க என்னு காலை வெச்சுவிடுவேன்.
அதை மீறியும் சிலர், என்னம்மா பெரிய வாய்ப்பு, நீங்க என்ன கண்டுக்க மாட்டிறீங்கன்னு சொன்னாங்கன்னா, இதுக்கு மேல பேசினால் போலீஸ் கம்ப்லைண்ட் கொடுத்துருவேன்னு சொல்லுவேன், அவ்வளவு தான் என்று ஜாக்குலின் தெரிவித்த்துள்ளார்.