வெயிலுக்கு ஏத்த ஆடையா?வாயில வந்தது எல்லாம் பேசமுடியாது!! தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி..
தமிழ் சினிமாவில், இந்த மாதம் மே-வில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்யாகவுள்ளன. சந்தானத்தின் டெலில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படம் மே 16 ஆம் தேதியும் அதே தேதியில் சூரியன் மாமன் படமும் ரிலீஸாகவுள்ளது. இவர்கள் இருவருக்கும் முன்னதாக ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்துள்ள அம்பி என்ற படம் 9 ஆம் தேதி ரிலீஸாகிறது.
வெயிலுக்கு இதமான ஆடையா?
இந்நிலையில், அம்பி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது அப்படத்தில் நடித்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம் ஆடை குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஸ்லீவ்லெஸ் சேலையில் வந்த அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், நீங்கள் அணிந்திருப்பது வெயிலுக்கு இதமான ஆடையா? என்று கேள்வி கேட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரகுபதி
இதனால் சற்றும் எதிர்பாராத ஐஸ்வர்யா, பதில் சொல்லமுடியாமல் திணறி, படத்தின் டாப்பிக்குக்கு சம்பந்தமில்லாத கேள்வியை ஏன் கேட்குறீங்க என்று கூறியுள்ளார். மேலும் உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என கோபப்படாமல் அந்த சூழலை அமைதியான முறையில் சமாளித்தார்.
மேடையில் அமர்ந்திருந்த இமான் அண்ணாச்சி, ஆமாம்னு சொல்லும்மா ஏன் பயப்படுற, வெட்டு துண்டுன்னு பதில் சொல்லுன்னு கூறியிருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா, அவரது கேள்விக்கு எனக்கு தோன்றுவதை சொல்லிவிட முடியும், ஆனா கேமரா, மீடியா எல்லாம் வாயில வந்தது எல்லாம் பேசமுடியாது என்று மேடையிலேயே ஐஸ்வர்யா ரகுபதி தெரிவித்துள்ளார்.