மூளையில் அறுவை சிகிச்சை! மீண்டு வந்த விஜே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியிலா?

anchor television vjarchana engaveettukalyanam
By Edward Sep 21, 2021 04:40 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே அர்ச்சனா. பிரபல தொலைக்காட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு பல பிரச்சனைகளை சந்தித்த விஜே அர்ச்சனா, சமீபத்தில் மூளையில் சில பிரச்சனையால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டுமென்று வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

15 நிமிடம் கூட தொடர்ந்து நிற்கமுடியாமல் தவித்த அர்ச்சனா தற்போது அதிலிர்ந்து மீண்டு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகவும் அதன் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.