மகள் என்றும் பார்க்காமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்! கோபத்தில் விஜே அர்ச்சனா..
பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே அர்ச்சனா. பல டிவிகளில் பணியாற்றிய அர்ச்சனா தன் மகள் சாராவையும் விஜேவாக சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் யூடியூப் சேனல் நடத்து பாத்ரூம் டூர் வீடியோ போட்டு சர்ச்சையாகினார்கள். அதன்பின் பிஸியாக இருந்த அர்ச்சனா பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப்பின் பலர் எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் தற்போது தாயில்லாமல் நானில்லை என்ற நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியில் மகள் சாராவும் தொகுத்து வழங்கியுள்ளார். இதைபார்த்த சிலர் நெகட்டிங் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நாங்கள் அன்பை வரவேற்பவர்கள்.
எங்களை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அதை உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள். அவளிடமிருந்து நாங்கள் அன்பை எதிர் பார்க்கவில்லை என்று இணையத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு டிடி, ஜாக்குலின் உள்ளிட்ட தொகுப்பாளினிகள் ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர். மகள் இப்படியான ஒரு திறமையை காட்டாமல் இருக்கக்கூடாதா என்று ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.