அவர் கூட வாழவே முடியாது சாமி!! வெறுத்துபோய் விவாகரத்து முடிவெடுத்த விஜே அர்ச்சனா.. மகள் செய்த செயல்..
சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்த தொகுப்பாளினி பயணம் தற்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பணியை தொடர்ந்து வருகிறார் விஜே அர்ச்சனா. 20004ல் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அர்ச்சனா சமீபத்தில் விவாகரத்து எண்ணம் தோன்றியதாகவும் கூறினார்.
தனக்கு பின் மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தினார். தற்போது யூடியூப் சேனலிலும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் வழக்கமாக வீடியோவை போட்டு பிரபலமாகினார் சாரா.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அர்ச்சனா தன் மகள் செய்த செயலை பற்றி பகிர்ந்திருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நான் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லை. விவாகரத்து வரை சென்றிருக்கிறேன் என்றும் நாம ஒன்றாக வாழவே முடியாது சாமின்னு இருந்தோம்.
ஆனால் சாரா எங்களிடம் ஒரு வாரம் பேசாமல் இருங்க, போன் யூஸ் பண்ணாதீங்க, பிளாக் பண்ணிட்டோம், வாட்ஸ் அப்பில் இல்லை, போன் கிடையாது. அப்போது, என் மகள் சாராவிடம் அப்பா எப்படி இருக்காரு, மாத்திரை போட்டாரா என்று கேட்டேன்.
அதற்கு சாரா, கால் பண்ணாதம்மா, அதான் டீல் என்று சொன்னால். அதன்பின் தான் நாங்கள் எங்களை புரிந்து கொண்டு அந்த முடிவை விட்டுவிட்டோம் என்று விஜே அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
You May Like This Video