அந்த பையனும் சாராவும் அப்படி இருக்கிற மாதிரி போட்டோ, அத பாத்துட்டு கஷ்டமா ஆச்சி.. அர்ச்சனா வேதனை
பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் அர்ச்சனா. இவரும் இவரது மகள் சாரா இருவரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் நடித்து இருந்தனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அர்ச்சனா, எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இப்போது கூட சண்டை போட்டுட்டு தான் வந்தேன். காரணம் என்னவென்றால் சாரா அவர் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால். அதில் அவளும் ஒரு பொன்னும் இரண்டு பசங்களும் இருந்தார்கள்.
ஆனால் சாராவும் ஒரு பையனும் ஒண்ணா இருப்பது போல் கிராப் செய்து, 'இவனோட ஆளு இவ தான் என்று சக மாணவன் இன்ஸ்டா ஸ்டோரியில் சாராவை மென்ஷன் செய்து இருக்கிறார்கள். இது குறித்து சாராவிடம் கேட்டேன் அவள் விளக்கம் கொடுத்தார்.
ஆனாலும் அந்த புகைப்படத்தை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது. நான் சாராவை பற்றி மட்டும் யோசிக்கவில்லை. அவளுடன் இருக்கும் அந்த பையனை நினைத்தும் கவலைப்பட்டேன்.
சாரா மீடியாவில் இருக்கிறார் அதனால் இந்த பிரச்சனை எல்லாம் பெருசாக தெரியாது. ஆனால் அவளோடு அந்த புகைப்படத்தில் இருக்கும் பையனுக்கு அப்படியே என சொல்ல முடியாது இல்ல என்று அர்ச்சனா கூறியுள்ளார்.
You May Like This Video