விஜே சித்ராவுக்கு ஹேமந்த் 4 வது காதலரா? பாலியல் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டார்? கணவர்..

Serials V. J. Chitra
By Edward Jun 07, 2022 05:00 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜேவாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் விஜே சித்ரா. பின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

பின் ஹேமாந்த் என்பவரை காதலித்து ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார். வாழ்க்கையில் ஒரு உயரத்தை பிடிக்கும் சமயத்தில் விஜே சித்ரா கணவருடன் ஓட்டலில் தங்கியிருக்கும் போது மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை செய்தது உறுதியானாலும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் கொலை என்று தான் கூறி வந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடங்களுக்கு மேலாகிய நிலையில் ஹேமந்த் கைது செய்யப்பட்டு ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார்.

சில மாதங்களில் எனக்கு சில கூலிப்படையினராலும் முன்னாள் அமைச்சராலும் ஆபத்து என்று கூறி கமிஷ்னரிடம் புகாரளித்தார். பின் பேட்டிகளில் கலந்து கொண்டு மனைவியை பற்றிய தகவல்களை கூறினார். அதேசமயம் விஜே சித்ராவின் தோவி நடிகை ரேகா நாயர், சித்ரா போதை பொருள் பழக்கம், மது, புகைப்பிடிப்பது என கெட்ட பழக்கங்கள் வைத்திருக்கிறார்.

அவரது ரூமில் பல காண்டம்கள் இருக்கும் என்று ஹேமந்த் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுடன் சேர்ந்து தான் சித்ராவை கொலை செய்திருக்கிறார்கள் என்று காட்டமாக கூறியிருந்தார்.

மேலும் அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் இருப்பது உண்மை என்று ரேகா கூறியதற்கு ஹேமந்த், சித்ராவுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாகவும் அது அரசியல் புள்ளிகளும் அடங்கும் என்றும் கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ரேகாவும், சித்ரா பணத்திற்காக பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறியிருந்தார். பணத்தாசை தான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தது எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் பணப்பிரச்சனை இருந்தபோது கடை திறப்பு விழாவுக்கு சென்ற சித்ரா ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. ஹேமந்த் சித்ராவுக்கு 4 வது காதலர் என்றும் செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.