தொகுப்பாளினி டிடி-க்கு இவ்வளவு பெரிய மகனா.. இதுவரை யாரும் பார்க்கவே இல்லையே
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பால் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
அதில் குறிப்பாக காஃப் வித் டிடி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரியளவில் பிரபலமானது. சினிமா நட்சத்திரங்களை தன் தனித்துவமாக பேச்சால் நிகழ்ச்சியை அழகாக எடுத்து சென்றார். இவரது அக்கா பிரியதர்ஷினியும் விஜேவாகவும் சீரியல் நடிகையாக பணியாற்றியவர்.
அவரை ரோல் மாடலாக எடுத்து தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேல் டிடி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டு டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி 3 வருட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் நடிகர்களுடன் நெருக்கம் பார்ட்டி என்று ஜாலியாக இருந்து வருகிறார். இந்நிலையில் டிடி-யின் அக்கா பிரியதர்ஷினி மகன் ரிஷி-யுடன் இந்தோனேஷியா வெகேஷனுக்கு சென்றுள்ளார். 44 வயதான திவயதர்ஷினிக்கு இந்த வயசில் மகன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.