அங்க போனா காசு தான் புடுங்குவாங்க! கண்டபடி பேசிய தொகுப்பாளினி..
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் கனாகாணும் காலங்கள், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியலில் சிறு கதாபாத்திரத்து அறிமுகமாகினார் ஜாக்லின். பின் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சில சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார்.
பின் நடிகை நயன் தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானார். பின் அதே தொலைக்காட்சியில் தேன்மொழி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உடல் பரிசோதனைக்காக பிரபல மருத்துவமனை ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பின் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையை பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அதில் மோசமான அனுபவம், எவ்வளவு முடியலன்னு போனாலும் நாம சொல்றத கேட்கவே மாட்டார்கள். அந்த மருத்துவமனைக்கு சென்றாலும் குணமாகும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்படி இல்லாமல் அதிக பணம் மற்றும் அலட்சியம் மட்டும் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
