எனக்கு அந்த மாதிரி நடிக்க ஆசை தான்.. கூடிய சீக்கிரம்!! விஜே மகேஸ்வரி ஓப்பன் டாக்..
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மகேஸ்வரி. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான மகேஸ்வரி ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சியில் மகேஸ்வரி இளம் நடிகருடன் லிப் லாக், ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது பரவி வந்தது. சமீபத்தில் அளித்த பேட்டியில், இப்படி கிளாமர் போட்டோஷூட் போடுவதால் பல வாய்ப்புகள் வருகிறது.
சமீபத்தில் கூட ஒரு நெருக்கமான காட்சியில் நடித்தேன் அது பிரபலமானது. அந்த வெப் தொடரின் தயாரிப்பாளருக்கு பிரச்சனை இருந்ததால் அப்படியே ட்ராப் ஆகிவிட்டது. அந்த நெருக்கமான காட்சியை கட் செய்து ஒரு பாட்டாக வெளியிட்டார்கள். கதைக்கு தேவையென்றால் நான் அப்படி நடிக்க தயார் தான்.
நிறைய பேர் கிளாம் சாங் பண்ண கேட்டிருக்கிறார்கள், நான் அதற்கு எதிரானவள் கிடையாது. ஒரு கிளாமர் சாங் பண்ண ரொம்ப நாள் ஆசை தான், கூடிய சீக்கிரம் நான் செய்யலாம் பார்க்கலாம். என்னை பொறுத்தவரையில் எனக்கு பெண்களுக்கு முக்கியத்துவமாக படம் அமைவதில்லை என்று கூறியிருக்கிறார்.