டான்ஸ் ஜோடி டான்ஸில் அந்தரத்தில் தொங்கிய மணிமேகலை!! சினேகா கொடுத்த ரியாக்ஷன்..
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது சின்னத்திரை பிரபலமாக கொடிக்கட்டி பறந்து வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை.
விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி 5ல் விஜே பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மணிமேகலை.
அவருக்கும் பலரும் ஆதரவு அளித்த நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார்.
அந்தவகையில் பிரபல நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக விஜே விஜய்யுடன் இணைந்துள்ளார்.
சமீபத்திய எபிசோட்டில் அந்திரத்தில் இருந்து தொங்கவிட்டபடி நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த செயலின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளதது.
அதில் இந்த சேனல் சொல்றதை எல்லாம் செஞ்சி கொடுக்குறாங்களே என்று கூறி ஏற்கனவே வேலை செய்த சேனலை கலாய்த்துள்ளார் மணிமேகலை.