7 வருஷமாச்சு என் ஆசை நடக்கவே நடக்காது!! விஜே மணிமேகலை எமோஷ்னல் வீடியோ..
VJ மணிமேகலை
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி ஷோ நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தி கொடுத்தது. கோமாளியாக மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக வந்தார்.
இதன்பின் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறினார். இவருடைய வெளியேற்றத்திற்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் காரணம் என ரசிகர்களிடையே கிசுகிசுக்கப்பட்டது.
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய VJ மணிமேகலை ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
எமோஷ்னல் வீடியோ
சமீபத்திய டான்ஸ் ஜோடி டான்ஸ் எபிசோட்டில் விஜய், மணிமேகலை பற்றி பேசியது அவரை எமோஷ்னலாக்கியுள்ளது. மணிமேகலை ஆசைப்பட்ட மாதிரி அவருடைய அப்பா சீக்கிரமாக இந்நிகழ்ச்சிக்கு வருவார் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு மணிமேகலை, அதற்கு வாய்ப்பே இல்லை, ஏழு வருஷமாச்சு, அப்பா இன்னும் அவருடைய முடிவில் இருந்து மாறவில்லை, இனிமேல் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்று எமோஷ்னலாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மணிமேகலைக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.