அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிருக்கலாம், ஆனால்! உண்மையை நடிகையிடம் கூறி புலம்பும் தொகுப்பாளினியின் வீடியோ..

survivor gayathri arjun vjparvathy televsion
By Edward Oct 03, 2021 10:45 PM GMT
Report

பிக்பாஸ், மாஸ்டர் செஃப் போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்துள்ளது சர்வைவர் நிகழ்ச்சியை. நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி தனித்தீவில் காடு பகுதியில் கடுமையான டாஸ்க்குகளுடன் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவதாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே எலிமினேட்டாகி வெளியேறினார். இதையடுத்து, விஜே பார்வதி சர்வைவல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே தன்னை திறமையான பெண் என்பதை காட்டிக்கொள்ள அனைத்து விஷயங்களிலும் சக போட்டியாளர்களை கடுப்பேற்றி கொண்டிருந்தார். அத்துடன் சர்வைவர் போட்டியாளர்களுக்கும் விஜே பார்வதிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதும் உண்டு.

தற்போது மூன்றாம் உலகத்தில் இருக்கும் விஜே பார்வதி மற்றும் காயத்ரி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் இதில் விஜே பார்வதி, மீடியாவில் இருப்பவர்களை ரசிகர்கள் முகத்தை பார்த்தே கருத்தை கூறுகிறார்கள். மேலும் விஜே பார்வதி நினைத்திருந்தால் எப்போவோ உயர்ந்த இடத்திற்கு சென்று இருப்பாராம்.

அவருடைய பெற்றோர்கள் பார்வதியிடம் திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் உடம்புக்கு இல்லை என்று சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார்களாம். எந்த இடத்திலுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ள அவசியம் இல்லை என்றும் அவர் நினைத்திருந்தால் எப்போதோ நல்ல இடத்திற்கு சென்று இருப்பாராம்.

ஆனால் அதை விஜே பார்வதி செய்யவில்லை என்று காயத்ரிவுடன் பேசியுள்ளார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.