திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா VJ பிரியங்கா!! பிக்பாஸ் பிரபலம் போட்ட புகைப்படம்...

Pregnancy Priyanka Deshpande Star Vijay Pavani Reddy
By Jai May 08, 2026 04:45 AM GMT
Report

விஜே பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையோடு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார் பிரியங்கா.

திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா VJ பிரியங்கா!! பிக்பாஸ் பிரபலம் போட்ட புகைப்படம்... | Vj Priyanka Deshpande Pregnant News Madhumitha Pic

முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிய, சில ஆண்டுகளாக அம்மா, சகோதரர் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் பிரியங்கா. கடந்த ஆண்டு பிரபல டிஜே வசி என்பவருடன் திருமணத்தை முடித்தார் பிரியங்கா.

திருமணமாகிய பிரியங்கா தன்னுடைய வேலைக்காக சென்னையும், வசி லண்டனிலும் வசித்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் இருவரும் சந்தித்து தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா VJ பிரியங்கா!! பிக்பாஸ் பிரபலம் போட்ட புகைப்படம்... | Vj Priyanka Deshpande Pregnant News Madhumitha Pic

கடந்த மாதம் ஏப்ரல் 16 ஆம் தேதியோடு திருமணமாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளனர். முதலாம் ஆண்டு திருமண நாளை லண்டனில் தன் கணவருடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார் பிரியங்கா.

கர்ப்பமாக

இந்நிலையில், பிரியங்காவின் தோழியும் பிக்பாஸ் பிரபலமுமான மதுமிதாவும் பாவனியும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பிரியங்கா வெட்கப்பட்டு தலைகுனிந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும், பிரியங்கா கர்ப்பமாக இருக்கிறாரா? வாழ்த்துகள் என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGallery