குழந்தை பெத்துக்கணும், என்ன பயங்கரமா லவ் பண்ணனும்!! இரண்டாம் திருமணத்திற்கு காத்திருக்கும் விஜே பிரியங்கா..
சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே. காமெடி கலந்து அவர் பேச்சும், காமெடி ரியாக்ஷன்களும் தனி ரசிகர்கள் பட்டாளே இருக்கும் இடையில் இரட்டை அர்த்த காமெடிகளை கூறி எரிச்சலும் ஏற்படுத்துவார்கள். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில முகம் சுளிக்க வைக்கும் விசயத்தையும் செய்தார். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரியங்கா. ஒரு நிகழ்ச்சியில் அர்ச்சனா பங்கேற்ற போது அர்ச்சனாவிடன் சில விசயங்களை குறித்து பேசினார் பிரியங்கா.

அர்ச்சனாவிடம் மறு பதிலளித்த பிரியங்கா, 40 வயதாவதற்குள் என்னலாம் செஞ்சுவிடனும் என்ற ஆசையை பற்றி பேசியிருக்கிறார். ரொம்ப பெருமை படும் விசயம் என்றால் அது பெரிய கார் வாங்கவேண்டும் என்பது தான், அதை பண்ணிவிட்டேன். பிக்பாஸ் போறது எனக்கு ஒரு பக்கெட் லிஸ்ட்டில் இருந்தது, அதிலும் சென்றுவிட்டேன். நெகட்டிவ் பற்றி தேவையில்லாமல் யோசித்து அதை கடந்துவிட்டேன். சொந்த வீட்டு வாங்கனும், இப்போது இருக்க வீட்டை மூடிவைத்துவிட்டேன்.
ஏனென்றால் சில நியாபங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான். என் கனவு வீட்டு கண்டிப்பாக கட்டனும் என்பது இன்னொரு பக்கெட் லிஸ்ட். 25 வெளிநாடுகளுக்கு போய்டனும், அமெரிக்காவிற்கே இன்னும் போகவில்லை, அதை 40 வயதுக்குள் செஞ்சிவிடணும் என்று கூறியிருக்கிறார். ஒருத்தவங்க வளருவதை பார்த்து, பேசுறதை பார்த்து நாம் வளர்ந்துட்டோம் என்று பேசட்டும் என்று போய்விடனும்.

எனக்கு 3 கல்யாணம் ஆகிடுச்சின்னு வதந்தி செய்தி போட்டாங்க, ஆனால் நம்மல காதலிப்பவர்களை நானும் அதிகமாக காதலிப்பேன். மேலும் பேசியய பிரியங்கா, ஜிம் ஒர்க்கவுட் செய்கிறேன், வயசு வேற ஆகுது, ஒரு அழகான குழந்தை பெத்துக்கணும் வேற ஆசை இருக்கு, இதெல்லாம் நல்லா நடக்கணும் என்றால் ஹெல்த்தியா இருக்கணும். என் அண்ணன் குழந்தை தான் என்னுடைய எல்லாம். அவளுடைய காதலுக்காக தான் நான் ஏங்குகிறேன்.
அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன். சின்ன வயசுல நான் இருப்பது போல இருக்கிறாள், என் மகள் அவள். என் அம்மா என் வாழ்க்கை இப்படியாகிச்சேன்னு உடைஞ்சிட்டாங்க. 34 வயதில் இருந்து அவங்க கஷ்டப்படுறாங்க, அவள் எனக்காக அவங்க குடும்பத்துடன் பல விசயங்கள் செய்தார்கள். அண்ணன் மகள் அதையெல்லாம் மாற்றிவிட்டால் என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் விஜே பிரியங்கா.
என்னை உள்ளங்கையில் தாங்குறவங்களிடம், அதைவிட நான் ஜாஸ்தியா கொடுப்பேன். எனக்கு காதலிக்கணும்னு ஆசை இருக்கு, என்னை ஏமாத்தாத ஒரு விசயம் என்றால் அது என் தொழில், என்னை நம்பி இருக்கும் மக்களுக்காக நான் எல்லாத்தையும் கீழே வைத்துவிட்டு அதை பண்ணுவேன் என்றும் பேசியிருக்கிறார்.