என்ன சிம்ரன் இதெல்லாம்! போட்டோஷூட் பக்கம் இறங்கிய தொகுப்பாளினி பிரியங்கா..
தொலைக்காட்சி சேனலில் பலர் தொகுப்பாளர்களாக பணியாற்றி வேறு ஒரு பாதையில் சென்றுவிடுகிறார்கள். அப்படி எங்களுக்கு இந்த வேலையே போதும் என்று கூறும் அளவிற்கு தங்கள் விஜே பணியினை சிறப்பாக செய்து வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா.
பிரியங்கா டெஸ்பாண்டே விஜேவாக பணிக்கு வருவதற்கு முன்பில் இருந்தே மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா.
பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றும் இருந்து வருகிறது.
அப்படியிருக்கையில், சமீபத்தில் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகியது. இதேபோல் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நிகழ்ச்சியை தொடர்வார் என்று எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் நண்பர்களுடன் ஹைதராபாத் சென்றதால் அவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இதனால், பிரியங்காவிற்கு பதில் மைனா நந்தினியையும், மாகாபா ஆனந்திற்கு பதில் தர்ஷன், குரோஷி போன்றவர்களையும் பயன்படுத்தி நிகழ்ச்சியை ஒளிப்பரப்பாக்கி வந்தனர். தற்போது மீண்டும் இருவரும் இணைந்து பல வாரங்கள் கழித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர்.
சுற்றுலா எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் சூப்பர் சிங்கர் செட்டிற்கு பிரியங்கா வந்து விட்டார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளினி விருதினை கைப்பற்றியதுடன் போட்டோஷூட் பக்கம் முழுவதுமாக திரும்பியுள்ளார்.
இதுவரை பார்க்காத அளவிற்கு பிரியங்காவின் போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.