கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்.. VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட போட்டோஸ்
VJ பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த சில மாதங்களுக்கு முன் வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் DJ ஆவார். மேலும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர் ஆவார். இலங்கை வாழ் தமிழகர்களிடையே மிகவும் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருமான மறைந்த இரா. சம்பந்தன் அவர்களின் தங்கையின் மகன்தான் பிரியங்காவின் கணவர் வசி.
சமீபத்தில் தனது கணவர் வசியுடன் வெளிநாட்டிற்கு vacation சென்றுள்ளார் பிரியங்கா. அங்கிருந்து எடுத்துக்கொண்ட அழகிய வீடியோ ஒன்றை கூட இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.









