அமைதியாக இந்த வேலையை பார்த்து வரும் விஜே பிரியங்கா.. இந்த மனசு இருக்கே..
பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜே-வாக பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. ஆரம்பத்தில் சிறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி வந்தார்.
இருவரின் காமினேஷனும் சிறப்பாக அமைந்து நிகழ்ச்சியை காமெடியாக வழி நடத்தி செல்வதற்கென்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
அப்படி திருமணமாகி சில கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
தன் அம்மா, தம்பியுடன் வாழ்ந்து வரும் பிரியங்கா நண்பர்களுடன் நேரத்தினை செலவிடும் வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது மார்க்கெட்டே உயர்ந்த நிலையில் கிடைக்கும் பணத்தில் சில நல்ல காரியத்திலும் செயல்பட்டு வருகிறார்.
அந்தவகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் ஒரு நாள் செலவிட்டு வந்துள்ளார்.
Ray of Light Foundation-ன்னு சென்று அங்கு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு செய்து ஒரு பதிவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.