2ம் திருமணத்திற்கு ரெடியான விஜே பிரியங்கா!! மாப்பிள்ளை இந்த பிரபலமா?
தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது.
பிரியங்கா தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக பல கருத்துக்கள் இணையத்தில் பரப்பி வந்தனர். ஒருசிலர் அப்படியெல்லாம் இல்லை என்றும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரியங்கா, பிரவீனை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகவும் சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.
மேலும் பிரியங்கா, சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் படி இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது.
You May Like This Video