சூப்பர் சிங்கரா வேண்டாம்? ஹைதராபாத் முடித்து ஜெர்மனுக்கு பிளான் போட்ட பிரியங்கா!!

supersinger priyanka biggbosstamil5 pavni vjpriyanka
By Edward Mar 08, 2022 08:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர், சேம்பியன்ஸ் என பல பரிமானங்களில் நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பெரும்பாலும் மாகாபா ஆனந்த், பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார்கள். கடந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசனுக்கு சென்றதால் பிரியங்காவிற்கு பதில் சீரியல் நடிகை மைனா நந்தினி மாகாபாவுடன் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடந்து பிரியங்கா ஒருவாரம் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். ஒரு வாரம் மட்டும் வந்த பிரியங்கா அடுத்த வாரமே பிக்பாஸ் நண்பர்களுடன் ஹைதராபாதிற்கு பறந்தார். மறுபடியும் அவருக்கு பதில் மைனா நந்தினி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்படி பிரியங்கா நடந்து கொண்டிருக்கும் போது நிகழ்ச்சி குழு பிரியங்காவை இந்த சீசன் முடியும் வரை விலக்கி வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரியங்கா இன்னும் ஹைதராபாத்திலிருந்து இன்னும் திரும்பவில்லை.

இந்நிலையில் ட்ரிப் டு ஹைதராபாத் என்ற வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரியங்கா ஹைதராபாத்திற்கு பிறகு ஜெர்மனுக்கு அடுத்த ட்ரிப்பை போடவுள்ளதாக கூறியுள்ளார். எல்லாம் பிக்பாஸில் சம்பாதிச்ச காசு தான் காரணம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.