விஜே சித்ரா தற்கொலைக்கு தொகுப்பாளர் ரக்ஷனுக்கு தொடர்பு.. குண்டைத்தூக்கி போட்ட ஹேமந்த்..

Serials V. J. Chitra Rakshan
By Edward Oct 21, 2022 08:00 AM GMT
Report

சின்னத்திரையில் விஜே-வாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜே சித்ரா. சின்னப்பாப்பா பெரியபாப்பா தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார் சித்ரா.

சித்ரா தூக்கிட்டு தற்கொலை

பல்வேறு சீரியல்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சித்ரா ஹேமந்த் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து தனி ஹோட்டலில் வாழ்ந்து வந்தார். கடந்த 2020ல் டிசம்பர் 9 ஆம்தேதி காலை ஸ்டார் ஓட்டலின் அறையில் மர்மமான முறையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இதுகுறித்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. சித்ரா பற்றிய தகவல்கள் ஹேமந்த் பற்றிய தகவல்கள் சித்ராவின் பெற்றோர்கள் தோழிகள் என பல உண்மைகளை கூறி வந்தனர். இரு பெரும் புள்ளிகள் சித்ரா தற்கொலைக்கு முழு காரணம் ஒருப்பதாகவும் ஹேமந்த் கூறியிருந்தார்.

விஜே சித்ரா தற்கொலைக்கு தொகுப்பாளர் ரக்ஷனுக்கு தொடர்பு.. குண்டைத்தூக்கி போட்ட ஹேமந்த்.. | Vj Rakshan Has Connection In Vj Chithra Suicide

சித்ராவிற்கு ரக்ஷன்  தொந்தரவு

இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சித்ராவின் கணவர் ஹேமந்த், விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சித்ராவிற்கு ரக்ஷன் பல நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் இதுகுறித்த ஆதாரங்கள் சித்ராவின் நண்பர் ரோகித்திடம் இருப்பதாகவும் கூறியுள்ளார் ஹேமந்த்.

சித்ரா மரணமடைந்த அப்போது ரக்ஷன் பெயர் அப்போதே அடிப்பட்ட நிலையில் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார் ரக்ஷன். இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் போலிசார்.

Gallery