கல்யாணம் பண்ணாதான் சந்தோஷமா இருக்க முடியுமா!! 2-ஆம் திருமணம் பற்றி ஓபன் செய்த விஜே ரம்யா..

Star Vijay Ramya Subramanian Marriage Tamil Actress
By Edward Jul 06, 2024 05:00 PM GMT
Edward

Edward

Report

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தற்போது பல படங்களில் விழாக்கள், விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ரம்யா. அப்ரஜித் ஜெயராமன் என்பவரை கடந்த 2014ல் திருமணம் செய்த ரம்யா, கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் விவாகரத்து பிரிந்தார். திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்ற விஜே ரம்யா, கேரியரில் கவனம் செலுத்தியும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.

கல்யாணம் பண்ணாதான் சந்தோஷமா இருக்க முடியுமா!! 2-ஆம் திருமணம் பற்றி ஓபன் செய்த விஜே ரம்யா.. | Vj Ramya Angry About Someone Ask 2Nd Marriage

இந்நிலையில் இரண்டாம் திருமணம் குறித்து சில தகவலை கூறியிருக்கிறார். என் அம்மா ஒரு பேட்டியில் எப்போ கல்யாணம் பண்ணிக்க போற என்று கேட்டாங்க. கேமராவை கட் பண்ணிட்டு, என்ன உனக்கு விவஸ்த்தை இல்லையா என்று திட்டினேன் என்று கூறியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்படியான கேள்வி அம்மாவிடம் இருந்து வந்தது.

இப்போது என் நிலையை பார்த்து, எது நடந்தாலும் ரம்யா பார்த்துப்பாள் என்று நினைத்து கல்யாணம் பற்றி கேட்காமல் இருக்கிறார்கள். ஒரு பொண்ணை மீட் பண்ண பப்புக்கு எல்லாம் போகாமல் டேட்டிங் ஆப் போகலாம். எப்போது கல்யாணம் என்று முன்னாள் கேட்கும் போது ஒரு அழுத்தம் இருக்கும், இதை எப்படி ஃபேஸ் பண்றது, என்ன சொல்றது என்று இருக்கும்.

கல்யாணம் பண்ணாதான் சந்தோஷமா இருக்க முடியுமா!! 2-ஆம் திருமணம் பற்றி ஓபன் செய்த விஜே ரம்யா.. | Vj Ramya Angry About Someone Ask 2Nd Marriage

இப்போது அப்படி கேட்டால், STR சொல்றது போலத்தான், யாராவது வயசானவங்க கல்யாணம் பற்றி கேட்டால், நீங்க எப்போ சாகப்போறீங்கன்னு உங்ககிட்ட யாராவது கேக்குறாங்களா என்று கேட்கத் தோன்றும். நான் விளையாட்டுத்தனமாக நான் என் வாழ்க்கையை கொண்டு செல்லமாட்டேன்.

கல்யாணம் பண்ணால் தான் சந்தோஷமா இருப்பாங்க என்ற அவசியம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சந்தோஷமா இருப்பாங்க என்ற அவசியமும் கிடையாது. சிங்கிளாக இருக்கும் போது ஹாப்பியா இருக்கலாம், கல்யாணம் பண்ணியும் தனிமையில் இருக்கலாம் என்பது தான் என்னுடைய பதில் இதுதான்.