கணவரால் டார்ச்சல்! லைவ்வில் விஜே ரம்யாவை கலங்க வைத்த ரசிகையின் கேள்வி!
தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் நடிகை ரம்யா சுப்ரமணியன். ஆரம்பகால நிகழ்ச்சிகளையும் சினிமா சம்பந்தமான விழாக்களையும் தொகுத்து வழங்கி வருபவர்.
சமீபத்தில் கொரோனா லாக்டவுனில் உடற்பயிற்சி, நடனம் என நாட்களை கழித்து வந்தார். சமீபத்தில் சில படங்களிலும் நடித்து வெளியானது. மாஸ்டர் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் எப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா சமீபத்தில் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ரம்யா ரசிகை ஒருவரின் பதிவால் ஷாக்காகியுள்ளார். நேரலையில் கமெண்ட் மூலம் ரம்யாவிடம் உரையாடிய ரசிகை, ‘எனது கணவர் தினமும் என்னை அடிக்கிறாரு. அதனால், என்னோட கல்யாண வாழ்க்கையை முடிச்சிக்கிறேன். எல்லா பெண்களும் உங்களுக்காக நீங்கள் தான் போராட வேண்டும்’ என்று கூறியுள்ளார் அந்த பெண்.
மகிழ்ச்சியாக சென்ற லைவ் சேட்டில் பெண் இப்படி கூறியதும் சோகமாகிய ரம்யா, நீங்க பாதுகாப்பான இடத்துல, உங்க குடும்ப நபர்களுடன் இருப்பீங்கனு நம்புறேன்.
இந்த மாதிரி பெண்களுக்கு எதிரான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்குதல்கள் பல நடந்து வருது. உங்களுக்காகவே நான் ரொம்ப வருத்தப்படுறேன்’ என்று ஆறுதல் கூறியுள்ளார்
மேலும் இதுபற்றி விரிவான மெசேஜ் ஒன்றினையும் பதிவிட்டு வீடியோவாக பகிர்ந்துள்ளார் ரம்யா.