மணிமேகலை தூக்கிட்டு சிவாங்கியை விஜேவாக மாற்ற பிளான்!! Live-ல் விஜே ரக்ஷன் கொடுத்த ஐடியா..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றதோடு ரசிகர்களை ஏங்கி காத்திருக்கும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் கோமாளிகள் குக் போட்டியாளர்களிடம் போடும் அட்டாசம் தான்.
புகழ் சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா உள்ளிட்ட பலர் கோமாளியாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்தனர். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி 4 சீசனில் மணிமேகலை தொகுப்பாளினியாகவும் சிவாங்கி கோமாளியில் இருந்து நீங்கி போட்டியாளராக கலந்து கொண்டார்.
சிவாங்கி குக் வித் கோமாளி 4 சீசனில் இறுதி சுற்று வரை சென்று தோல்வி அடைந்தார். இது குறித்து சிவாங்கி புகழ் மற்றும் விஜே தர்ஷனுடன் லைவ் வீடியோவில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார். சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டு, இனிமேல் குக் வித் கோமாளியில் நான் கிடையாது என்று கூறியிருந்தார்.
தர்ஷன் புது படத்தின் ஆடிஷன் முடித்து வந்தேன் என்று சொல்ல, புகழும் விளம்பர ஷூட் முடித்து விட்டதாக கூறினார். இதற்கு சிவாங்கி எல்லோரும் வேலையா இருக்கீங்க நான் ஏதும் இல்லாமல் இருக்கேன் என்று கூறினார்.
இந்நிலையில், காமெடியாக பேசிய வந்த சிவாங்கி மற்றும் புகழிடம் விஜே தர்ஷன், வேணும்னா மணிமேகலையை தூக்கிட்டு நீ ஆங்கர் ஆகிடு, நானும் நீயும் ஆங்கர் வேலை பார்ப்போம் என்றும் மணிமேகலை விலகிடுவா என்றும் கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் மணிமேகலை குக் வித் கோமாளி 5 சீசனில் வராதபட்சத்தில் சிவாங்கி ஆங்கராகவும் வரலாம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.