அவரா வேண்டவே வேண்டாம்!! அஜித் ஒதுக்கியும் ஓகே சொன்ன தயாரிப்பாளர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். தற்போது விடா முயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். அஜித் இந்த டாப் இடத்திற்கு வர பலர் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அப்படி அஜித்தின் தனுத்துவமான கேரியரை ஆரம்பிக்க முகவரி படம் முக்கியமானதாக அமைந்தது.
V.Z. துரை இயக்கத்தில் எஸ் எஸ் சக்ரவர்த்தி தயாரிப்பில் 2000 ஆம் ஆண்டு முகவரி படம் வெளியானதும். இப்படத்தின் இயக்குனர் துரை சுந்தர் சி-யை வைத்து தலைநகரம் 2 படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ் மீட்டில் V.Z. துரை மேடையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
உதவி இயக்குனராக வேலை செய்யாமல் முகவரி படத்தின் மூலம் இயக்குனராகினேன். என்மீது நம்பிக்கை வைத்தவர் எஸ் எஸ் சக்ரவர்த்தி சார் தான் என்று கூறி அழுதுள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தி சார் இறந்ததற்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துங்கள் என்றார்.
அதன்பின் பேசிய துரை, எனக்கு மட்டும் முகவரி படம் கொடுக்கவில்லை, இன்னைக்கு தல அஜித் இந்த உயரத்திற்கு இருக்க அவரின் பங்களிப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் V.Z. துரை. மேலும் அஜித் தன்னை முதலில் நம்பவில்லை என்றும் யாரிடமும் உதவி இயக்குனர் வேலையை பார்க்காதவரை எப்படி நம்புவதும் என்றும் நினைத்துள்ளாராம்.
வேண்டவே வேண்டாம் என்று இருந்த அஜித்திடம் தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தி தான் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார் என்று துரை பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.