விஜய் பயன்படுத்திய பொருளை எடுத்தே பழி வாங்கிய Jr NTR!! மாஸ்டர் கிளைமேக்ஸ் காட்சியை காப்பி அடித்த வார் 2..
இந்தியளவில் பிரம்மாண்டமாக உருவான இரு படங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படமும், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர் நடித்த வார் 2 படமும் இன்று ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளது.
இரு படமும் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், வார் 2 படத்தின் முதல் நாள் காட்சியை பார்த்த நெட்டிசன்கள், ஒரு விஷயத்தை இணையத்தில் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
வார் 2 கிளைமேக்ஸ் காட்சி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இருந்து ஒரு காட்சி வார் 2வில் அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாஸ்டர் கிளைமேக்ஸில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதிக் கொள்ளும் போது இருவரும் கரங்களை வைத்து நேருக்கு நேராக குத்திக்கொள்ளும் காட்சி இடம்பெறும்.
அப்போது விஜய் தன் கையில் இருந்த காப்பைக்கழட்டி, வைத்துக்கொண்டு குத்துவார். இதனால் விஜய் சேதுபதி கையில் இருந்து காயம் ஏற்பட்டு வலி ஏற்படும். அதையே வார் 2 படத்தில், விஜய்யை போன்று ஜூனியர் என் டி ஆர், காப்பை வைத்து ஹிருத்திக் ரோஷன் கையை குத்திவிடுவார்.
இதனால் ஹிருத்திக் கையில் ரத்தன் கொட்டும். இதனை பார்த்த பலரும், லோகியை அப்படியே காப்பி அடித்து வைத்துள்ளீர்கள் என்றும் இருந்தாலும் வார் 2 படத்தின் கிளைமேக்ஸ் நன்றாக இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.