என்னடா பண்ணி வெச்சுருக்க! யூடியூப் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரே போச்சு..

youtube Arakkonam ChildBirth
By Jai Dec 20, 2021 05:13 AM GMT
Report

இந்த காலத்தில் சமுகவலைத்தளத்தின் மோகம் மக்களின் அனைத்து வித செயல்பாடுகளை மாற்றியமைத்து வருகிறது. சோம்பேறிகளாக்கவும் கெட்ட செயல்களை தூண்டவும் செய்கிறது. அப்படி யூடியூப் பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததால் குழந்தை மரணமடைந்த செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் நெடும்புலி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் ஒரு வருடத்திற்கு முன் கோமதி என்பரை திருமணம் செய்தார். கர்ப்பமுற்ற கோமதிக்கு மருத்துவர்கள் கடந்த 13ஆம் தேதி பிரசவ நாளாக கொடுத்துள்ளனர்.

அந்த நேரத்தில் பிரசவவலி வராத நிலையில் 18 ஆம் தேதி வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவர் லோகநாதன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் தன் சகோதரியின் உதவியுடன் யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார்.

இதனால் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதிக அளவு ரத்தப்போக்கால் மயங்கிய கோமதியை புன்னை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த லொகநாதனை தற்போது விசாரணை செய்து வருகிறார்கள் போலிசார்.

Gallery