பணத்துக்காக விருப்பமில்லாத எதையும் செய்யலா,!! நடிகை பாத்திமா சனா வேதனை..
பாத்திமா சனா
பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பாத்திமா சனா, தங்கல் படத்தில் அமீர்கானுக்கு மகளாக நடித்து பிரபலமானார். இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்ற்ல் பேசிய பாத்திமா, பாலிவுட் சினிமாவில் பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் குறைவாகவே இருக்கிறது. ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு நல்ல, ஆழமான ரோல்கள் கிடைப்பதில்லை. சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு, அங்கும் சில பிரிவினைவாத விஷயங்கள் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
சில சமயங்களில் வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கும். அப்போது, பணத்துக்காக நமக்கு விருப்பமில்லாத பணிகளைக்கூட செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். நாங்கள் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லை. சில சமயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

பணத்துக்காக
கிடைக்கும் சொற்ப வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நாம் எவ்வளவு கனவு கண்டாலும், அதை தீர்மானிப்பது நாமாக இருக்க முடியவில்லை.
வருமானத்திற்கும், வாழ்க்கைக்காகவும் நாம் எதையும் செய்யலாம், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் பாத்திமா சனா.