AI-உடன் நெருக்கமாகிவிட்டேன்..எதுவுமே எல்லைத்தாண்டக் கூடாது!! சோபிதா கருத்து..
சோபிதா துலிபாலா
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சோபிதா துலிபாலா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சோபிதா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதன் பயன்பாடு குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் இப்போது சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மிகவும் நெருக்கமாகிவிட்டேன். நான் மட்டுமல்ல, பெரும்பாலானோர் இதில் மூழ்கிக் கிடக்கிறோம்.
எல்லைத்தாண்டக் கூடாது
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு காரணமாக தங்களது அன்றாட வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்களுக்கு கூட போதிய நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சில முக்கிய நிகழ்வுகளுக்கூட நேரம் ஒதுக்க முடியவில்லை.

இது சரியா? தவறா? என்பது வேறு விஷயம், ஆனால் எதுவுமே எல்லைத்தாண்டிச் செல்லக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.