எல்லோரும் இருக்காங்க! அவங்க காணோமே! பிரியங்காவிற்கு இதுதான் நடந்ததா?

பிக்பாஸ் 5 சீசன் தற்போது இறுதி வாரத்தில் உள்ளது. வரும் ஞாயிறு இறுதி போட்டி நடக்கவுள்ள நிலையில் எலிமினேட்டாகி போட்டியாளர்கள், நடியா சாங், ஸ்ருதி, அபிநய், சிபி, வருண், தாமரைச்செல்வி ஆகியோர் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர்.

ஒருசில இனிமேல் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்காப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியாகிய பிரமோ வீடியோவில் பிரியங்கா இல்லாதது ஷாக் கொடுத்துள்ளது.

அனைவரும் இருக்கும் போது பிரியங்கா எங்கே என்று பலர் கூறியுள்ள நிலையில், பிரயங்காவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தாமரைச்செல்விக்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை பிரியங்கா தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் என்று தாமரைச்செல்வியே சமீபத்தில் ஐக்கி பெர்ரியுடன் பேசும் போது கூறினார்.

தற்போது பிரியங்கா உடல்நிலையில் என்ன பிரச்சனைக்காக வராமல் இருக்கிறார் என்று தான் தெரியவில்லை. மேலும் ராஜுவிற்கு ரோஜா பூக்கள் கையில் வழங்கப்பட்டது பிரியங்காவுடையது என்றும் கூறப்படுகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்