நடிகை நித்யா மேனனுக்கு என்ன ஆச்சி? வீல் சேரில் வர இது தான் காரணமா?
யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இயக்குனர் மித்ரன் கவஹர் இயக்கத்தில் தனுஷ் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இணைந்திருக்கிறார்கள். படம் முடிந்து எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தும் வருகிறார்.
ரிலீஸ் தேதி தள்ளிப்போகிக்கொண்டே இருந்த நிலையில் படம் ஆக்ஸ்ட் 18 ஆம் தேதி வெளியாக திட்டமிட்டுள்ளனர். தற்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்துள்ளது. அனிருத் -தனுஷ் பிரச்சனையால் இருவரும் சந்திக்கொள்ளவில்லை என்ற செய்தி இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனிருத் விழாவிற்கு வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தனுஷ் கூட அனிருத்தை என் மகன் என்று கூறி பெருமையாக பேசியுள்ளார். இந்நிலையில் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வீல் சேரில் உட்கார்ந்த படி வந்தது ஷாக்காக இருந்தது.
இதற்கு காரணம் சில நாட்களுக்கு முன் படியில் இருந்து தவறி விழந்ததால் கணுக்காலில் அடிப்பட்டுள்ளதாம். இதுகுறித்து மேடையில் அவர் கூறியது, கணுக்கால் தற்போது நன்றாக இருக்கிறது என்றும் நடக்க ஆரம்பித்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். என் எடையை என்னால் தற்போது சுமக்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.