முகம் வீங்கி மோசமான தோற்றம்!! உதட்டில் ஊசிப்போட்ட நடிகை உர்ஃபிக்கு ஏற்பட்ட பின்விளைவுகள்..
உர்ஃபி ஜாவத்
பாலிவுட்டில் வித்தியாசமான மற்றும் கவர்ச்சியாடை அணிந்து பொது இடங்களுக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் உர்ஃபி ஜாவத். சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையில் வரும் உர்ஃபி, அமேசான் பிரைமில் தன் வாழ்க்கை குறித்த டாக்குமெண்ட்ரி ஷோவை வெளியிட்டார்.
உதட்டில் ஊசி
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டிருந்தார். உதட்டில் ஊசிப்போட்டு தனது லிப் ஃபில்லரை நீக்கும்போது முகமே வீங்கிபோயுள்ளது. அந்த வீடியோவில், பலரும் ஜிகினா விளம்பரங்களை செய்து, சூப்பரான காஸ்மெடிக்ஸ் க்ளினிக் என விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஆனால் ஒருத்தருக்கும் ஒன்றுமே தெரியவில்லை. ஆரம்பத்தில் தெரியாத்தனமாக ஒரு டாக்டரிடம் வாயை கொடுத்த நிலையில், ஒழுங்காகவே லிப் ஃபில்லரை வைக்கவில்லை.
அதன் காரணமாக நல்ல டாக்டரை தேடிப்பிடித்து தற்போது ஒட்டுமொத்தமாக லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடன் இருக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று உர்ஃபி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
லிப் ஃபில்லரை எடுத்தவுடன் இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.