நீதா அம்பானியின் உதவியாளர்களின் சம்பளம்!! கார் ஓட்டுநருக்கு மட்டும் இவ்வளவா?
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி
ஆசியாவின் பணக்காரர்கள் லிஸ்ட்டில் டாப் இடத்தில் இருப்பவர் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகள் பிறந்து தற்போது மூவரும் திருமணமாகி, குடும்பத்தையும் பிசினஸையும் பார்த்து வருகிறார்.
அம்பானி குடும்பம் என்றாலே பிரமாண்டத்திற்கு பேர் போனவர்கள் தான். தாங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் முதல் செல்லும் கார் வரை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ரோல்ஸ் ராய்ஸ், உள்பட பல சொகுசு கார்களை வைத்திருக்கும் அம்பானி குடும்பத்தினருக்கும் நீதா அம்பானி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை சமீபத்தில் வாங்கினார் நீதா அம்பானி.
சமீபத்தில் கூட தீபாவளி பார்ட்டிக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஹேண்ட்பேக் எடுத்துச்சென்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
உதவியாளர்களின் சம்பளம்
இந்நிலையில், நீதா அம்பானியின் உதவியாளராக பணியாற்றுபவர்களின் மாதம் சம்பளம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் நீதா அம்பானியின் தனிப்பட்ட கார் ஓட்டுநராக இருக்கும் சுதீர் சிந்தே என்பவருக்கு மாதம் ரூ. 2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம். இவர் நீதா அம்பானிக்கு 2012 முதல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாராம். அவரின் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ. 25 லட்சம் என்று கூறப்படுகிறது.