அனிருத்துக்கு கல்யாணம் எப்போ!! உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்
அனிருத்துக்கு கல்யாணம்
தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். பிஸியாக வேலை செய்து வரும் அனிருத்திற்கு 34 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுகுறித்து இந்த நடிகையை திருமணம் செய்யப்போகிறான் என்றெல்லாம் வதந்திகள் வந்துக்கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகர்த்திகேயனிடம், அனிருத்துக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை ஒரு நிகழ்ச்சியில் கேட்டுள்ளனர்.
அதற்கு சிவகார்த்திகேயன், அனிருத்திடம் திருமணம் பற்றி விசாரித்தேன். திருமணமானவர்களுக்கு இரவு 8 மணிக்கு மேல் எங்கிருக்கிறோம் என விசாரிக்க அழைப்பு வரும், ஆனால் அனிருத் தூங்கி எழுந்துகொள்வதே இரவு 8 மணிக்கு தான்.
அவருக்கு திருமணம் முக்கியமா? ஹிட் பாடல்கள் முக்கியமா என்ற யோசித்தேன், ஹிட் பாடல்கள் தான் முக்கியம் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
