என் வாழ்க்கையில் மனதளவில் கஷ்டப்பட்டேன்..அப்போது உடைந்து போயிட்டேன்!! நடிகை அதிதி சங்கர்..

Shankar Shanmugam Aditi Shankar Tamil Actress
By Jai Aug 24, 2026 11:00 AM GMT
Report

இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் படிப்பைவிட்டுவிட்டு நடிப்பின் மேல் அதீத ஆசையால், கார்த்தியுடன் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

அப்படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகிய அதிதி, மாவீரன், நேசிப்பாயா, பைரவரம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து டாப் நடிகையாக மாறினார். தற்போது ஒன்ஸ் மோர் படத்தில் நடித்து படமும் வெளியாகவுள்ளது.

சமீபத்திய பேட்டியொன்றில், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எதாவது ஒரு கடினமான காலக்கட்டம் வரும். அப்படி என் வாழ்க்கையிலும் ஒருக்கட்டத்தில் நான் மனதளவில் மிகவும் உடைந்து போய் இருக்கிறேன்.

என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தபோது, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் எனக்கு வாய்ப்பு ஒன்று வந்தது, அதுதான் ஒன்ஸ் மோர்.

இக்கதையை கேட்டதும் எனக்குள் ஒரு புதிய நம்பிக்கை பிறந்ததுபோல் இருந்தது. இந்த படம்தான் என்னை அந்த இடையில் இருந்து மீட்டெடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை அதிதி சங்கர்.